Home ஆன்மீகம் அத்திவரதருக்கு அப்படி என்ன சிறப்பு.! அவருடைய வரலாறு தெரியுமா?

அத்திவரதருக்கு அப்படி என்ன சிறப்பு.! அவருடைய வரலாறு தெரியுமா?

- Advertisement -

சென்னைக்கு அடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ளது தான் இந்த காஞ்சி வரதராஜர் கோயில்.இந்த காஞ்சி வரதராஜர் கோயில் என்பது பெருமாள் கோயிலாக கருதப்படுகிறது. மேலும் இதை திருக்கச்சி கோயில் என்றும் அழைப்பார்கள் .வைணவ சமயத்தினரால் போற்றப்பட்டு வழிப்பட்டு வந்த புனித தலங்களான திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகியவைக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்பட்டு வழிப்பட்டு வந்த தலம் தான் இந்த காஞ்சி வரதராஜர் பெருமாள் கோயில்.இந்த கோயில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக சொல்லப்படுகிறது.

Image result for athivaradhar


- Advertisement -

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பற்றி பல கல்வெட்டுகள் மூலம் அறிந்தது இதை முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் தான் சேர்ந்து இந்த கோயிலை சீரமைத்தனர்.இக்கோவிலில் தேவராஜப் பெருமாள் தான் மூலவராக வேழ மலை (அத்திகிரி) மீது நின்று காட்சி தருகிறார்.அத்தி வரதர் என்பவர் வரதராஜர் பெருமாளுக்கு அடுத்ததாக நீருக்கு ஆடியில் இருந்து போற்றப்படும் பெருமாளின் இன்னொரு அவதாரம் ஆகும்.இவரின் சிலை அத்தி மரத்தால் செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள்.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள குளத்தில் தான்”அத்தி வரதர்” குடி கொண்டு உள்ளார். வரதராஜ பெருமாளும் , அத்தி வரதரும் வேறு வேறு இல்லை ,இருவரும் பெருமாளின் அவதாரங்கள் ஆகும். ஆண்டுதோறும் காஞ்சி வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய இயலும். ஆனால் அத்தி வரதர் அப்படியில்லை 40ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் குளத்தில் இருந்து வெளியே வந்து மக்களுக்கு தரிசனம் தருவார். அப்படிப்பட்ட அந்த நாளை மக்கள் அனைவரும் போல் சந்தோசமாக கொண்டாடுவார்கள்.இது காஞ்சிபுரத்தில் நடக்கும் மாபெரும் பண்டிகை என்று கூறுகிறார்கள்.

Image result for athivaradhar


அந்த அத்தி வரதர் கோயில் திருவிழா காஞ்சிபுரத்தில் பல ஆண்டுகளுக்கு பின் இந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் வந்தது. இப்பண்டிகை 48 நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவில் எந்த துஷ்ட சம்பவங்களும் நடக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒரு திட்டம் செய்தார். மக்கள் தரிசனம் செய்ய கிழக்கு பாதை வழியே வந்து, மேற்கு பாதை வழியே செல்ல வேண்டும் கூறினார்.பல இடங்களில் இருந்து வரும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்து உள்ளார்.உண்மையில் இந்த கோயிலின் ஆதி மூர்த்தியாக திகழ்ந்தவர் தான் இந்த அத்தி வரதர்.இவர் அனைத்தையும் படைக்கும் தொழில் கொண்ட பிரம்ம தேவரால் அத்தி மரத்தால் உருவாக்கப்பட்டார்.

Image result for athivaradar


அத்தி வரதர் தோன்றிய வரலாறு , ஒரு நாள் பிரம்மர் காஞ்சியில் யாகம் நடத்தினார். அந்த யாகத்துக்கு சரஸ்வதி தேவியை அழைக்கவில்லை .அதனால் கோபம் அடைந்த சரஸ்வதி தேவி, பிரம்மர் செய்து கொண்டு இருந்த யாகத்தை அழிக்க தன் உருவத்தை மாற்றி ஆறாக மாறினார்.இதனை அறிந்த திருமால் பிரம்மரின் யாகத்தைக் காக்க தன்னை சயனக் கோலத்தில் மாற்றி நதிக்கு நடுவில் நின்றார் அதனால் சரஸ்வதி தேவி தன் பாதையை மாற்றி சென்றதால் . பிரம்மரின் யாகம் வெற்றி பெற்றது. இதனை கண்டு சந்தோசம் அடைந்த பிரம்மர் , பெருமாளை வணங்கினார். அனைவரும் கேட்கும் வரங்களை தருவதால் பெருமாளுக்கு `வரதர்’ என்ற திருப்பெயர் வந்தது . அதுமட்டுமில்லாமல் பிரம்மர் அவரின் திருவுருவத்தை அத்தி மரத்தால் வடிவமைத்தார். அதனால் தான் பெருமாளுக்கு அத்தி வரதர் என்ற பெயர் வந்தது.

Image result for athivaradar


அதேபோல் ஒரு நாள் பிரம்மர் அத்தி வரதரை முன் வைத்து ஒரு யாகம் செய்தார். யாகத்தின் வெப்பம் திருமாலால் தாங்க முடியவில்லை.என்ன செய்வது அறியாது நின்றார் பிரம்மர் பின் திருமால் சொல்லிய கூற்றுப்படி செய்தார். திருமால் தன்னை (அத்தி வரதரை) நூற்றுக் கால் மண்டபத்துக்கு அருகில் உள்ள திருக்குளங்களில் சயனக் கோலத்தில் வைக்க சொன்னார். மேலும் நான் உள்ள இந்த திருக்குளத்தில் எப்போதும் தண்ணீர் குறையாது என்று பிரம்மரிடம் சொன்னார். அதன் பின் அத்தி வரதர் நீருக்கு அடியில் சென்றதும் சீவரம் ஊரில் உள்ள தேவராஜப் பெருமாள் அத்திகிரி மலைக்கு வந்து தரிசனம் அளித்தார்.

இன்று அத்தி வரதர் காட்சிக்காக மக்கள் அலை மோதுகின்றனர். அத்தி வரதர்தரிசனம் மூலம் மக்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று ஆன்மிக வாதிகள் கூறுகிறார்கள்

- Advertisement -
96,044FansLike