உடல் எறிந்த நிலையில், எங்களை காப்பாற்றுங்கள் என்று கதறிய சிறுவர்கள் – வீடியோ உள்ளே

0
5

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் சென்னை, கோயமுத்தூர், ஈரோடு பகுதியை சேர்ந்த மலையேற்ற பயிற்சிக்காக இரு அணிகளாக சென்ற 39 நபா்கள் காட்டுத்தீயில் நேற்று மதியம் சிக்கினர்.உடனடியாக மீட்கும் பணியில் உள்ளூா் பொதுமக்கள், வனத்துறையினா், தீயணைப்பு வீரா்கள், காவல் துறையினா் ஈடுபட்டனர்.

theni

நேற்றுமாலை முதல் தற்போது வரை 27 போ் மீட்கப்பட்டுள்ளனா். மீட்கப்பட்டவர்களில் 10 பேருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்றும் 5 போ் தேனி மருத்துவமனையிலும், 2 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் 6 போ் மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்ட மேலும் சிலா் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தில் சென்னையைச் சோ்ந்த அருண், விபின், அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா உள்ளிட்டோா் உயிாிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

forest

மேலும் ஈரோட்டைச் சோ்ந்த விஜயா – தமிழ் செல்வன் ஆகிய புதுமண தம்பதியினரும் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.இவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இவா்களது உடன் வந்திருந்த விவேக் என்கிற நண்பரும் இந்த விபத்தில் உயிாிழந்துள்ளார்.

உயிரிழந்த இந்த மூவரும் ஈரோட்டைச் சோ்ந்தவா்கள் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.இதுவரையிலும் இந்தவிபத்தில் உயிாிழந்த 9 போின் உடல்களும் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

tnfire

விபின் என்பவரது உடல் உள்ளூர் மக்களின் உதவியுடன் தோள்களில் தூக்கியபடி மலையில் இருந்து கொண்டுவரப்பட்டது.மற்ற 8 போின் உடல்களும் இராணுவத்தினரால் ஹெலிகாப்டரின் உதவியுடன் கொண்டு வரப்பட்டுள்ளன.மற்றவர்களை மீட்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.