எல்லாரும் உங்க கிட்ட அபராதம் வசூலிக்க முடியது.! அந்த அதிகாரம் இவங்களுக்கு மட்டும் தான்.!

0
320
traffic

தமிழக அரசு போக்குவரத்து துறையில் புதிய மோட்டார் வாகன சட்டங்களை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு கொண்டு வந்தது. அதன்படி சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என்றும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு போடப்படும் அபராதத்தை யாரெல்லாம் வசூலிக்கலாம் என்பது குறித்த அறிக்கை வெளியிட்டார்கள். இந்த அறிக்கை குறித்து தமிழக அரசு கூறியது. எஸ்,ஐக்கு நிகரான அதாவது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவருக்கு மேலுள்ள அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்யவும் சாலை விதி முறைகளை மீறுபவர்களிடமிருந்து அபராதங்கள் வசூலிக்க கூடும் என்றும் தெரிவித்தார்கள்.

new-traffic-rules-will-be-implement-in-tamilnadu

அடுத்தபடியாக சிறப்பு நிலை துணை ஆய்வாளர் எனப்படும் எஸ்,ஐக்கு நிகரான போக்குவரத்து காவல் அதிகாரிகள் கூட வாகனங்களை சோதனை செய்யவும், வாகன ஓட்டிகளிடம் இருந்து அபாரதங்களை வசூலிக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும் இவர்களுக்கு குறைவான அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகள் யாரும் வாகனங்களை சோதனை செய்யவோ , அபராதங்களை வசூலிக்கவோ கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தற்போது அமுல்படுத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி மூலம் 10 மடங்கு அளவு அபராதத்தை உயர்த்தி சட்டம் அமல்படுத்தப்பட்டது என்று தமிழக அரசு ஆணை இட்டுஉள்ளது. இச்சட்டத்திற்கு காரணம் அபராத தொகையை வசூலிப்பது நோக்கமல்ல!! சாலை விதிமுறைகளினால் ஏற்படும் விபத்துக்களையும், பல உயிரிழப்புகளையும் தடுக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டது ஆகும். மேலும் இனிமேலாவது ஹெல்மெட் அணியாமல், சாலை விதிகளை மீறாமல் செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு ஒரு பயம் ஏற்படும்.

உயர் நீதிமன்றம் யாரெல்லாம் அபாரதத்தை வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டபடி சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறைந்த அதிகாரிகள் வசூலிக்கக்கூடாது, மேலும் வாகன சோதனை சாவடிகள் உள்ள இடத்தில் மட்டும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் போக்குவரத்து அதிகாரிகளும், சப்-இன்ஸ்பெக்டர்கள் விதிமுறைகளை மீறுபவர்கள் இடமிருந்து அபராதங்களை வசூலிக்கலாம் என்றும் தெரிவித்தார்கள். இதன்மூலம் ஆங்காங்கு குறைவான அதிகாரத்திலுள்ள அதிகாரிகள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டால் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள்.

tamilnadu-government-announces-about-who-is-collect-the-penalty-for-against-new-traffic-rules

உயர் நீதிமன்றம் யாரெல்லாம் அபாரதத்தை வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டபடி சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறைந்த அதிகாரிகள் வசூலிக்கக்கூடாது, மேலும் வாகன சோதனை சாவடிகள் உள்ள இடத்தில் மட்டும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் போக்குவரத்து அதிகாரிகளும், சப்-இன்ஸ்பெக்டர்கள் விதிமுறைகளை மீறுபவர்கள் இடமிருந்து அபராதங்களை வசூலிக்கலாம் என்றும் தெரிவித்தார்கள். இதன்மூலம் ஆங்காங்கு குறைவான அதிகாரத்திலுள்ள அதிகாரிகள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டால் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள்.

மேலும், ஹெல்மெட் அணியாமல் சென்றால் ஆயிரம் ரூபாயும், வாகன சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இல்லாமல் சென்றால் 5000 போன்ற பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டி செல்லுகிறார்கள் என்ற தகவலும் வெளிவந்து உள்ளது. இதனால் உயர் நீதிமன்றம் “கட்டாயம் ஹெல்மட் ” சட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவுயிட்டு உள்ளது .