ஓய்விற்கு பிறகு தோனி பிஜேபி-யில் இணைவார்.! பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சர்.!

0
57
Dhoni

உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதி சுற்றில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்திய அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியதிற்கு இணையாக தோனி அடுத்த உலக கோப்பையில் விளையாட மாட்டார் என்ற செய்தி தான் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Image result for dhoni in bjp

மேலும், அடுத்த உலக கோப்பைக்குள் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றுவிடுவார் என்ற ஒரு செய்தியும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தோனி, கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெறக் கூடாது என்று அவரது ரசிகர்கள் கூறி வரும் நிலையில், தோனி ஓய்வுக்கு பிறகு தோனி பா ஜ கவில் இணைவார் என்று செய்திகள் பரவி வருகிறது. ஆனால், தோனி அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று அவரது ரசிகர்கள் கருத்துக்களையும் தெரிவித்து வரும் வண்ணம் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தோனி பா ஜ கவில் இணைவது குறித்து பாஜகவைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் சஞ்சய் பஸ்வான் பேசியுள்ளார். . இந்த நிலையில் தோனி பா ஜ கவில் இணைவது குறித்து பாஜகவைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் சஞ்சய் பஸ்வான் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இதுகுறித்து அவர் கூறியதாவது, . பாஜகவில் தோனி இணைவது குறித்து பல நாட்களாக பேசி வருகிறார்.

Image result for dhoni with modi

பாஜகவில் தோனி இணைவது குறித்து அவரது ஓய்வுக்குப் பின்னரே தெரியவரும். தோனி உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர். அவர் கட்சியுடன் இணைவது குறித்து முயற்சி எடுத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் தோனி சந்தித்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருட இறுதியில் ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போது பாஜகவில் இணைந்த கம்பீருக்கு டெல்லி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் கம்பீர் வெற்றி பெற்று தற்போது எம்.பி.யாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தோனியும் அரசியலில் குதித்தால் அவருக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.